மேகதாதுவில் அணை கட்டப்படுவதற்கு முன்பே தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் – விஜயகாந்த்!
மேகதாதுவில் அணை கட்டப்படுவதற்கு முன்பே தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், அண்மையில் அம்மாநில முதல்வர் எடியூரப்பா தமிழக முதல்வருக்கு இது தொடர்பாக கடிதம் எழுதியிருந்தார். இதற்கு பதில் கடிதம் எழுதிய தமிழக முதல்வர் ஸ்டாலின் மேகதாது அணையால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
மேலும், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகனும் அண்மையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து இந்த விவகாரம் தொடர்பாக பேசியிருந்தார். இருப்பினும், சட்டம் தங்களுக்கு சாதமாக இருப்பதால் எதிர்ப்புகள் வந்தாலும் மேகதாதுவில் அணை காட்டியே தீருவோம் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்திருந்தார். இதற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல்வாதிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல் இல்லாமல், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு முன்பாகவே தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுத்து அணை கட்டாமல் தடுத்திடவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதோ அந்த பதிவு,
கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல் இல்லாமல், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு முன்பாகவே, @CMOTamilnadu தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுத்து அணை கட்டாமல் தடுத்திடவேண்டும். pic.twitter.com/m5YyDY68wZ
— Vijayakant (@iVijayakant) July 8, 2021