தமிழக அரசு மின்கட்டணத்தை உயர்த்துவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – ஜோதிமணி எம்.பி
தமிழக அரசு மின்கட்டணத்தை உயர்த்துவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஜோதிமணி எம்.பி ட்வீட்.
தமிழகத்தில் 8 ஆண்டுகளுக்கு பின் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரத்துறையில் ரூ.12,647 கோடி கடன் உயர்ந்துள்ளது என்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார்.
இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், ஜோதிமணி எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஒன்றிய மோடி அரசின் கொடுமையான ஜி.எஸ்.டி வரி மற்றும் மோசமான நிர்வாகத்தால் அத்யாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தொழில்கள் நசிவடைந்துள்ளன. மக்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். இந்த நேரத்தில் தமிழக அரசு மின்கட்டணத்தை உயர்த்துவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.
ஒன்றிய மோடி அரசின் கொடுமையான ஜி.எஸ்.டி வரி மற்றும் மோசமான நிர்வாகத்தால் அத்யாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தொழில்கள் நசிவடைந்துள்ளன.
மக்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். இந்த நேரத்தில் தமிழக அரசு மின்கட்டணத்தை உயர்த்துவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.— Jothimani (@jothims) July 20, 2022