நிழல் நிஜமாகிவிடாது என்பதை தமிழக அரசு உணர வேண்டும் – ஸ்டாலின்

நிழல் நிஜமாகிவிடாது என்பதை தமிழக அரசு உணர வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகையில், இணையவழிக் கல்வி முறை வகுப்பறைக் கல்விக்கு மாற்று இல்லை, நிழல் நிஜமாகிவிடாது.மாணவர்களிடையே பாகுபாட்டை உண்டாக்கி மாணவர் சமுதாயத்தின் எதிர்காலத்தைப் பாழடித்துவிடக் கூடாது.
அடிப்படை உட்கட்டமைப்பே இல்லாத நேரத்தில், இணையவழிக் கல்வி ஆபத்தானது .மாணவர்களுக்கு அரசு அறிவித்த கையடக்க மடிக்கணினி இதுவரை வழங்கப்படவில்லை.இணையவழிக் கல்வி மாணவர்களுக்குத் தேவையில்லாத மன அழுத்தத்தையும், தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.
‘டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதிகள்’ முழுமையாக இல்லாத தமிழகத்தில் #OnlineClasses மாணவர்களிடயே பாகுபாட்டை உண்டாக்கி எதிர்காலத்தைப் பாழடித்துவிடும்.
குழந்தைகளின் உள – உடல் நலனையும் பாதிக்கும்!
நிழல் நிஜமாகாது என்பதை உணர்ந்து #ADMKgovt இணையவழி கல்விக்கு அனுமதி வழங்கக் கூடாது. pic.twitter.com/uVJxWtM3bF
— M.K.Stalin (@mkstalin) June 17, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025
வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!
February 25, 2025