விசைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை தமிழ்நாடு அரசு பாதுகாக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் ட்வீட்.
தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளில் மக்களுக்கு இலவசமாக வழங்குவதற்கான வேட்டி, சேலைகளை விசைத்தறிகள் மூலம் உற்பத்தி செய்வதற்கான அரசாணை இன்னும் வழங்கப்படாதது குறித்து அன்புமணி ராமதாஸ் ட்வீட்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளில் மக்களுக்கு இலவசமாக வழங்குவதற்கான வேட்டி, சேலைகளை விசைத்தறிகள் மூலம் உற்பத்தி செய்வதற்கான அரசாணை இன்னும் வழங்கப்படவில்லை. அதனால் விசைத்தறி நெசவாளர்கள் போதிய வேலைவாய்ப்பின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்!
பொங்கலுக்கு தலா 1.80 கோடி வேட்டி, சேலைகள் வழங்கப்பட வேண்டும். அவற்றில் தலா 30 லட்சம் கைத்தறி மூலம் உற்பத்தி செய்யப்படும் நிலையில், மீதமுள்ளவை விசைத்தறி மூலம் தயாரிக்கப்பட வேண்டும். அதற்கான பணிகளை இப்போது தொடங்கினால் தான் பொங்கலுக்குள் முடிக்க முடியும்!
வேட்டி, சேலை தயாரிப்புக்கான ஆணை வழக்கமாக ஜூன் மாதம் வெளியிடப்படும். ஆனால், இப்போது ஆகஸ்ட் மாதம் ஆகியும் அரசாணை வெளியிடப்படாததால், நடப்பாண்டில் தங்களுக்கு வேலை கிடைக்காதோ? என்ற ஐயம் நெசவாளர்களிடம் ஏற்பட்டுள்ளது. இது போக்கப்பட வேண்டும்!
எனவே, இலவச வேட்டி, சேலை தயாரிப்புக்கான ஆணையை வழக்கமான நடைமுறைகளை பின்பற்றி விசைத்தறி சங்கங்களுக்கு வழங்க வேண்டும். அதன் மூலம் விசைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை தமிழ்நாடு அரசு பாதுகாக்க வேண்டும்!’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : சினிமாவை பொறுத்தவரையில் நடிகர்களுக்குள் போட்டிகள் இருந்தாலும் அது ஆரோக்கியமான போட்டியாகத் தான் இருக்கும். அந்த போட்டியை சினிமாவை…
சென்னை : இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம் அதானியுடன் தமிழக முதலவர் சந்திப்பு நிகழ்ந்ததா என்பது குறித்து விளக்கம்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்காக நடைபெற்று வரும் மெகா ஏலத்தின் இரண்டாம் நாள் இன்று தொடங்கியுள்ளது. இந்த ஏலத்தில் தொடக்கமே…
இந்நிலையில், வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து வானிலை…
சென்னை : சர்வதேச அளவில், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல…
சென்னை :சட்டுனு ஒரு சைடு டிஷ் வேணுமா?. அப்போ இந்த புளி மிளகாய் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.. தேவையான…