ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு அனுமதிக்க கூடாது.! தூத்துக்குடியில் போராட்டம்.!

Sterlitte Copper

ஸ்டெர்லைட் ஆலை திறக்க தமிழக அரசு அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி இன்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலை , சுற்றுசூழலை மாசுபடுத்துகிறது என கூறி மக்கள் போராட்டம் நடத்தி 13 பேர் உயிரிழந்தனர். இந்த போராட்டத்தை அடுத்து ஸ்டெர்லைட் ஆலையானது நிரந்தரமாக மூடப்பட்டது. இருந்தும் ஆலையை திறக்க கோரி ஆலை நிர்வாகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

இந்த வழக்கில், ஆலையில் இருக்கும் ஜிப்சத்தை எடுக்கவும், ஆலை பராமரிப்புக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் எனவும் ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் அனுமதி கேட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணை நாளை மறுநாள் (மே 4) நடைபெற உள்ளது.

இந்த வழக்கு விசாரணையின் போது, தமிழக அரசு சார்பில் ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதிக்க கூடாது என தமிழக அரசு கூற வேண்டும் என ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இன்று பல்வேறு கட்சி அமைப்பினர், ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் ஒன்றாக சேர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை சந்தித்து இதுகுறித்த கோரிக்கை மனுவை அளிக்க சென்றனர்.

அப்போது முன்கூட்டியே பாதுகாப்பு பணியில் ஏரளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் அத்தனை போரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.எ அதனால், ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டோரை போலீசார் கைது செய்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்