Tamil Nadu BJP leader K Annamalai (Image: Facebook)
சென்னை தி.நகரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பிரதமர் மோடி தலைமையற்ற பின் அந்நிய நேரடி முதலீட்டில் இந்தியா முன்னேறியுள்ளது. உத்திரபிரதேசத்தில் உலக முதலீட்டாளர் மாநாட்டில் ரூ. 33.51 லட்சம் கோடி முதலீடு கிடைத்தது. உத்திரபிரதேசத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளடக்கி முதலீடு பெறப்பட்டது. 2022-ல் கர்நாடகாவில் 9.82 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்த்தது. குஜராத்தில் முதலீட்டாளர் மாநாடு தொடங்குவதற்குள் ரூ. 7 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்த்துள்ளது.
இவற்றை பார்க்கும்போது தமிழக அரசு முதலீடு இலக்குகளை அதிகப்படுத்த வேண்டும். தமிழக அரசு நடந்து முடிந்த முதலீடு மாநாட்டில் 10 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்திருக்க வேண்டும் என தெரிவித்தார். சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் ஜனவரி 7, 8 ஆகிய 2 நாள்கள் உலக தொழிலாளர் மாநாடு (Tamil Nadu Globel Investors Meet – TNGIM 2024) நடைபெற்றது.
கூட்டணி பற்றி கவலை வேண்டாம்- எடப்பாடி பழனிசாமி..!
இந்த இரண்டு நாள் மாநாட்டில் மொத்தமாக 6.64 லட்சம் மதிப்பீட்டில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், நேரடி மற்றும் மறைமுக வாயிலாக 26.90 லட்சம் பேருக்கு தமிழகத்தில் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் கட்ட அமர்வு தொடங்கியுள்ளது. இதில் இன்று கேள்வி பதில் நேரத்தில்…