தூத்துக்குடி 8 மீனவர்கள் விசயத்தில் தமிழக அரசு இலங்கை அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது …!மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி
தூத்துக்குடி 8 மீனவர்கள் விசயத்தில் தமிழக அரசு இலங்கை அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறுகையில், தூத்துக்குடி 8 மீனவர்கள் விசயத்தில் தமிழக அரசு இலங்கை அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.அதேபோல் தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு தாமிர புஸ்கர விழாவில் நேற்று முன்தினம் மட்டும் 3 லட்சம் பேர் கலந்துகொண்டு புனித நீராடி உள்ளனர்.மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில், மாவட்ட தொழில் மையத்தின் மூலம் தொழிற் கடனுதவி விண்ணப்பங்கள் பெறும் முகாம்கள் நடத்தப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.