எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.351 கோடியை விடுவித்தது தமிழக அரசு!!
எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.702 கோடியில் 50% ஆன ரூ.351 கோடியை விடுவித்தது தமிழக அரசு.
2022-23-ஆம் ஆண்டுக்கான எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.702 கோடியில் 50% ஆன ரூ.351 கோடியை விடுவித்தது தமிழக அரசு. ஒரு தொகுதிக்கு ரூ.3 கோடி என்ற அடிப்படையில் பாதி நிதியை ஒதுக்கீடு செய்து திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு வழிகாட்டுதலையும் வெளியிட்டுள்ளது. தமிழக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுக்கு ஒவ்வொரு வருடமும் நிதி ஒதுக்கப்படும். இந்த தொகையில் எம்எல்ஏ-க்கள் தங்களுடைய தொகுதியில் கட்டமைப்பு வசதிகளை செயல்படுத்துவார்கள்.