#BREAKING: ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க தமிழக அரசு மறுப்பு..!
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருக்கும் ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க தமிழக அரசு மறுப்பு.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் தற்போது சிறையில் இருந்து வருகின்றனர். அதில், ரவிச்சந்திரன் மதுரை மத்திய சிறையில் 20 ஆண்டுகளாக இருந்து வருகிறார். இதனால் ரவிச்சந்திரனுக்கு சாதாரண விடுப்பு வழங்கவேண்டும் என இவரது தாயார் ராஜேஸ்வரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கொரோனா அதிகரித்து வரும் சூழலில் ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க முடியாது. தேர்தல் நேரம் என்பதால் தற்போதைய சூழலில் பாதுகாப்பு வழங்குவது இயலாது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை நாளை மறுநாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.