தினகரன் அணியின் மேல்முறையீடு தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கருத்து தெரிவித்துள்ளார்.
முதல்வர் மீது நம்பிக்கையில்லை என ஆளுநரிடம் மனு அளித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து தனபால் உத்தரவிட்டார். இதனையடுத்து இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்திரா பானர்ஜியும், சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். இதனால் இந்த வழக்கு 3-வது நீதிபதி சத்யநாராயணாவிடம் சென்றது.
இதையடுத்து இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செல்லும் என உத்தரவிட்டார்.
இன்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களுடன் மதுரையில் டி.டி.வி தினகரன் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
ஆலோசனைக்கு பின் 18 எம்எல்ஏக்கள் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் மேல்முறையீடு தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,தகுதிநீக்கத்தை எதிர்த்து 18பேரும் மேல்முறையீடு செய்தால் அதை சந்திக்க அரசு தயார் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்
ரியோ டி ஜெனிரோ : 19-வது ஜி20 உச்சி மாநாடானது இன்று பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது.…
சென்னை : மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தில் பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே 5…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காலை 10 மணி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதுதான் உலகமே எதிர்பார்த்துக்…
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…