TNGovt [Image Source : FACEBOOK/ TAMIL NADU GOVERNMENT SERVANTS ASSOCIATION]
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்தவகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள், 16 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்த நிலையில், தற்போது தமிழகத்தில் மேலும் 11 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கோவை மாநகராட்சி ஆணையர் எம்.பிரதாப், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை நிர்வாக இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா, திருவாரூர் மாவட்ட கூடுதல் ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!
நெல்லை மாநகராட்சி ஆணையராக தாக்கரே சுபம் நியமிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, ஈரோடு மாநகராட்சி ஆணையராகவும், மதுரை மாநகராட்சி ஆணையர் பிரவீன்குமார், சென்னை மாநகராட்சி மத்திய மண்டல துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆவடி மாநகராட்சி ஆணையர் தற்பகராஜ், உயர்கல்வித்துறை துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆவடி மாநகராட்சி ஆணையராக ஷேக் அப்துல் ரகுமான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் எல்.மதுபாலன், மதுரை மாநகராட்சி ஆணையராகவும், கோவை மாநகராட்சி ஆணையராக சிவகுரு பிரபாகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுபோன்று, திண்டிவனம் சார் ஆட்சியர் கட்டா ரவி தேஜா, சென்னை மாநகராட்சி வடக்கு மண்டல துணை ஆணையராகவும் இடமாற்றம் செய்து தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
சென்னை : தமிழ்நாடு அரசு நீண்ட காலமாக நீட் தேர்வுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிறது. இது குறித்து முதலமைச்சர் மு.க.…
சென்னை : சென்னை கோடம்பாக்கத்தில் ‘எம்புரான்’ திரைப்பட தயாரிப்பாளருக்கு சொந்தமான கோகுலம் சிட்பண்ட் நிறுவனத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில்…
சென்னை : வக்ஃபு திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் சார்பில், தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்…
சென்னை : பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான நடிகர் தர்ஷஷனுக்கும் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் ஒருவருக்கும் இடையே பார்க்கிங்…
சென்னை :காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா, ஆயுதப்படை) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.…
சென்னை : தங்கம் விலை இன்று (ஏப்.4) ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 குறைந்துள்ளது. கடந்த சில தினங்களாக தொடர்ந்து…