ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!
தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சுற்றுலாத்துறை மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழக மேலாண் இயக்குநராகவும், வணிகவரி முதன்மை செயலர் தீரஜ்குமார் தகவல் தொழில்நுட்பத்துறை, டிஜிட்டல் சேவைகள் துறை முதன்மை செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குநர் ஜெயஸ்ரீ முரளிதரன் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுபோன்று, பள்ளிக்கல்வித்துறை செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி குமரகுருபரனை நியமித்துள்ளது தமிழ்நாடு அரசு. பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, சுற்றுலாத்துறை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
9 ஐஏஎஸ் அதிகாரிகள், 16 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.! முழு விவரம் இதோ….
இதனிடையே, இன்று ஏற்கனவே தமிழகத்தில் 9 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் 16 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பை தமிழக தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா ஐஏஎஸ் மற்றும் தமிழக உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் ஆகியோர் வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில், தற்போது சில ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடம் மாற்றம் செய்து தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
IAS Officers-Transfers and Postings#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/ffkbtIknqr
— TN DIPR (@TNDIPRNEWS) October 12, 2023