‘மகளிர் சுய உதவிக் குழுவை சேர்ந்த பெண்களுக்கு கூடுதல் சலுகை’ – தமிழக அரசு உத்தரவு.!
மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் தமிழக அரசுப் பேருந்துகளில் பயணிக்கும்போது இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

சென்னை : மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ள பெண்களுக்கு பேருந்துகளில் கட்டணமில்லா சுமை பயணச்சீட்டை வழங்க தமிழ்நாடு போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நகரப் பேருந்துகள் மற்றும் புறநகர் பேருந்துகளில் 100 கி.மீ வரை, மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் 25 கிலோ வரையிலான பொருட்களை கட்டணமின்றி எடுத்துச் செல்ல போக்குவரத்து துறை அனுமதி வழங்கி உள்ளது.
விற்பனைப் பொருட்களின் சுமைக் கூலியை கொடுக்க முடியாமல் தவித்த மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கு சிறப்புச் சலுகையாக இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது. குறிப்பாக, எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள், பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பெரிய சுமைகளை அனுமதிக்கக் கூடாது.
கண்காட்சிக்கான பொருட்கள், விளைபொருட்களை எடுத்துச் செல்ல உதவும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுய உதவி குழு அடையாள அட்டை வைத்திருக்கும் மகளிருக்கு, பேருந்துகளில் பயணம் செய்ய கட்டணமில்லா சுமை பயணச்சீட்டு விரைவில் நடத்துனரால் வழங்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!
March 12, 2025
நதிகள், வடிகால்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் எச்சரிக்கை! ICMR -ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்!
March 12, 2025
அந்த பதவியே வேணாம் டா சாமி! நிராகரித்த கே.எல்.ராகுல்? டெல்லி அணியின் புது கேப்டன் யார் தெரியுமா?
March 12, 2025
பி.எம் ஸ்ரீக்கு தமிழ்நாட்டின் ஒப்புதல்…கடிதத்தை கொண்டு வந்த தர்மேந்திர பிரதான்..பதிலடி கொடுத்த அன்பில் மகேஷ்!
March 12, 2025