வீட்டைக் காலி செய்ய வற்புறுத்தினால் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவு.!
வீட்டைக் காலி செய்யுமாறு வற்புறுத்தினால் சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில், கொரோனா வேகமாக பரவி வருவதால் 1,596 பேர் பாதிப்படைந்து உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு 18 பேர் பலியாகி உள்ளனர்.மேலும் 635 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கொரோனா பரவல் தடுக்க எதிராக போராடி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர் கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் தாங்கி உள்ள சில வீட்டின் உரிமையாளர்கள் வீட்டை காலி செய்யுமாறு நெருக்கடி கொடுப்பதாக புகார் எழுந்த நிலையில், வாடகை வீட்டில் வசிக்கும் சுகாதார பணியாளர்களை காலி செய்யுமாறு வற்புறுத்த கூடாது என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், வீட்டைக் காலி செய்யுமாறு வற்புறுத்தினால் சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல் கண்காணிப்பாளர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.