புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து புதிய அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு வெளியிடலாம்- உச்ச நீதிமன்றம்
குட்கா பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்க தமிழக அரசு புதிய அரசாணை வெளியிடவும் உச்சநீதிமன்றம் அனுமதி
குட்கா, பான் மசாலா மற்றும் இதர புகையிலை பொருட்கள் விற்பனைக்கு தடை விதித்து 2018ல் வெளியிட்ட அரசாணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததற்கு எதிராக, மூத்த வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்ட்டாட்டில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் முறையிட்டார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் ரத்து உத்தரவுக்கு தடை
கடந்த மாதம் இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் ரத்து உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்த நிலையில், குட்கா நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இதனை தொடர்ந்து இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றத்தின் ரத்து உத்தரவுக்கு தடைவித்துள்ளதோடு, குட்கா பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்க தமிழக அரசு புதிய அரசாணை வெளியிடவும் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.