மக்கள் பிரச்சனைகளை தீர்க்காமல் வெறும் வெற்று அறிக்கைகளையும், அறிவிப்புகளும் வெளியிடும் தமிழக அரசு – விஜயகாந்த்

Default Image

சென்னையில் உள்ள அனைத்து பேருந்து நிறுத்தங்களின் சேதமடைந்த & நிழற்குடைகள் இல்லாத பேருந்து நிறுத்தங்களை உடனடியாக அதனை சரி செய்ய வேண்டும்  என விஜயகாந்த் அறிக்கை. 

சென்னையில் உள்ள அனைத்து பேருந்து நிறுத்தங்களின் மேற்கூரை தரமாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து, சேதமடைந்த & நிழற்குடைகள் இல்லாத பேருந்து நிறுத்தங்களை உடனடியாக அதனை சரி செய்ய வேண்டும் என கேப்டன் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ‘சென்னையில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 3 ஆயிரத்து 233 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மாநகர பேருந்துகளில் அன்றாடம் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் உள்ள பெரும்பாலான பேருந்து நிறுத்தங்களின் மேற்கூரை ஓட்டை உடைசலாக காட்சி அளிக்கிறது. ஒரு சில இடங்களில் மேற்கூரையே இல்லாததால் பயணிகள் உச்சி வெயிலில் பேருந்துக்காக காத்து கிடக்கும் அவல நிலை ஏற்படுகிறது.

பேருந்துக்காக மழையிலும், வெயிலிலும் பயணிகள் காத்து கிடப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. ஒருபக்கம் மழைநீர் வடிகால், மெட்ரோ ரயில் திட்டம் என சென்னை மாநகரம் முழுவதும் குண்டும் குழியுமாக காட்சியளிப்பதால், சென்னை மாநகரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஸ்தம்பிக்கிறது. போக்குவரத்து நெரிசலால் பேருந்து ஓட்டுநர்கள் சரியான இடத்தில் பேருந்துகளை நிறுத்த முடியாத நிலை உள்ளது.’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்