தமிழகத்தில் இருக்கும் குடிநீர் பற்றாக்குறையை போக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது-வேலுமணி
சென்னையில் நடைபெற்ற மழைநீர் சேகரிப்பு குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டார் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,சென்னை மற்றும் தமிழகத்தில் இருக்கும் குடிநீர் பற்றாக்குறையை போக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சென்னையில் மட்டும் 8 லட்சத்து 76 ஆயிரம் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உள்ளது. தெலுங்கு – கங்கை திட்டம் மூலம் ஆந்திராவில் இருந்து 8 டி.எம்.சி தண்ணீர் இன்னும் 25 நாட்களில் சென்னையை வந்தடையும் என்றும் தமிழகத்தில் குடிமாரமத்து பணிகள் மற்றும் வண்டல் மண் எடுக்கும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.