தனியார் மருத்துவமனைகளின் கட்டண கொள்ளைக்கு தமிழக அரசு துணை போகிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில்,கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல், கொரோனா தடு நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டது. இந்திய அளவில் இறப்பு விகிதம் குறைவாக இருப்பதாகவும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகம் இருப்பதாகவும் ஒப்பிட்டு பெருமிதம் அடைந்தனர். 2 மாதங்கள் நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது. கொரோனா சிகிச்சை அளிக்க என்றைக்கு தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி கொடுத்தார்களோ, அன்றைய தினத்திலிருந்து நிலைமை தலைகீழாகி விட்டது. முதல்வரின் மருத்துவக் காப்பீடு இருந்தால் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் என்றும், மற்றவர்களுக்கு ரூபாய் 9 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த தொகைக்கு கூடுதலாக தனியார் மருத்துவமனைகள் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எச்சரித்திருந்தார்.
முதலமைச்சர் கடும் எச்சரிக்கை விடுத்த பின்பும், தனியார் மருத்துவமனைகளில் கூடுதலாக பணம் பதவிக்கப்படுவதாக கொரோனா நோயாளிகள் தினந்தோறும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். ஆனால் அரசு தரப்பில் இருந்து இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. ஏழை, எளிய மக்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று கொரோனாவுக்கு சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கார்ப்பரேட் நிறுவனங்களில் முதலீட்டின் அடிப்படையில் லாப நோக்கத்தோடு சேவை மனப்பான்மையின்றி தொழிலாக நடத்தப்படுவதால் மருத்துவமனை கட்டணங்கள் என்ற பெயரில் கடுமையாக வசூலிக்கப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக இத்தகைய மருத்துவமனைகளில் எவராவது அனுமதிக்கப்பட்டால் நோயாளிகள் நாள்தோறும் குறைந்தபட்சமாக ரூ. 50 ஆயிரம் ஓதுக்க வேண்டிய நிலை இருக்கிறது. இந்த மருந்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டால் நோயாளிகள் சிகிச்சை முடிந்த நிலையில் ரூபாய் 5 லட்சம் முதல் ரூபாய் 10 லட்சம் வரை பணம் செலுத்தி இருக்கிறார்கள். இதைவிட ஒரு பகல் கொள்ளை வேறு எதுவும் இருக்க முடியாது.
கொரோனா காலத்திலும் ஈவு இரக்கமின்றி நோயாளிகளிடம் வசூல் வேட்டை நடத்துவதை தமிழக ஆட்சியாளர்களால் தடுக்க முடியவில்லை .இதற்கு என்ன காரணம் என்றால் மனதால் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட தமிழக அமைச்சர்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறாமலே வசூல் வேட்டை நடத்தும் தனியார் மருத்துவமனைகளில் தான் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தமிழக அரசு விதித்த கட்டண வரம்பை மீறுகிற தனியார் மருத்துவமனைகள் மீது தமிழக அரசு ஏற்பாடு நடவடிக்கை எடுக்க முடியும் ? தனியார் மருத்துவமனைகளில் வசூல் வேட்டைக்கு தமிழக அரசே உடந்தையாக இருப்பதாக குற்றம்சாட்ட விரும்பிகிறேன்.
தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு கொரோனா நோயாளிகளுக்கு விதித்த மருத்துவ கட்டண வரம்பை மீறுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தனியார் மருத்துவமனைகளின் கட்டண கொள்ளைக்கு தமிழக அரசு துணை போகிறது என்ற குற்றத்திற்கு ஆளாக நேரிடும் என்று எச்சரிக்கிறேன் .இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “நீட் தேர்வை…
சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையாற்றி வருகிறார். அப்போது…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கிய நிலையில், நேற்று ஐந்தாவது நாளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்துக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…
டெல்லி : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஷங்கர்…
சென்னை : நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய…