தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நேரில் காண உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு தமிழக அரசு அழைப்பு.
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்கக்கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையின்போது, தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு சாராயம் ஊற்றப்படுகிறது, கண்களில் மிளகாய் பொடி தூவப்படுகிறது என்று பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் குற்றசாட்டினர்.
உண்மையில் இந்த காளைகள் குடும்பத்தின் பிள்ளைகள். பிள்ளைகளையே யாராவது இப்படி துன்புறுத்துவார்களா? என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளது. பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தரப்பிலும், தமிழக அரசு தரப்பிலும் காரசார வாதம் முன்வைக்கப்பட்டது. பின்னர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் விதிமீறல்கள் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இந்த நிலையில், ஜல்லிக்கட்டு தொடர்பான அரசியல் சாசன அமர்வின் விசாரணை நிறைவடைந்த பிறகு இந்த ஆண்டு தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை காண நீதிபதிகள் நேரில் வர வேண்டும் என தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. அடுத்த மாதம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு தமிழக அரசின் வழக்கறிஞர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதனிடையே, ஜல்லிக்கட்டு காளையின் ஓய்வு வயது என்ன? என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த தமிழக அரசின் வழக்கறிஞர் ஜல்லிக்கட்டு காளையானது 6 வயது வரை போட்டிகளில் பங்கேற்கும் என தெரிவித்துள்ளார். காளைகளை தங்களது குடும்ப உறவு போன்று வளர்ப்பது தமிழகர்களின் வழக்கம் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…