ஒருதலைப்பட்சமான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது – கருநகராஜன்
சென்னையில் கருநகராஜன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அரசியல் காட்சிகள் கொடியேற்றுவது, வழக்கமான அரசியல் நடவடிக்கை. தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட, மத்தியில் ஆளும் பாஜகவின் கொடி மட்டும் பறக்க கூடாது என நினைப்பது மிக மிக தவறான ஒரு முன்னுதாரணத்தை தமிழகத்தில் ஏற்படுத்திவிடும்.
மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால், மற்ற கட்சிகளின் கொடியை ஏற்ற விடாமல் தடுக்க வேண்டுமா? அப்போது திமுக கொடி இங்கு பறக்க கூடாதா? பல பகுதிகளில் பல கட்சிகளின் கொடிகள் உள்ளது.
மழை காரணமாக அதிமுக பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு – ஈபிஎஸ்
அப்படிப்பட்ட இடங்களில் பாஜகவின் கோடியை ஏற்றக்கூடாது என சொல்வது, தடுக்க நினைப்பது ஒருதலைப்பட்சமான, ஒரு காழ்புணர்ச்சியான ஒரு நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது. பல்வேறு சமூக குற்றங்களை தடுக்க பயன்படுத்த வேண்டிய காவல்துறை, சட்ட நெறிமுறைகளை பாதுகாக்க வேண்டிய காவல்துறை, நேற்று மட்டும் 5000 மேற்பட்ட காவல்துறையினர் பாஜக கொடியை காட்டுகிறார்களா என பார்ப்பதற்காக பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பாஜகவை சேர்ந்த 1452 பேர் கைது செய்யப்பட்டு நள்ளிரவில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். பாஜக கட்சி கொடியை மட்டும் ஏற்ற ஏன் தடுக்க வேண்டும்? மாநகராட்சி ஆணையரிடம் கடிதம் கொடுத்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.