மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி!தமிழகத்தில் ஊரடங்கு முடிந்ததும் மதுபானங்களின் விலை உயருகிறது!
ஊரடங்கு முடிந்ததும் மதுபானங்களின் விலையை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால்,மதுப்பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் தீவிரமடைந்ததன் காரணமாக கடந்த திங்கள் முதல் மே 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.இதனால்,தமிழக அரசுக்கு 2900 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.குறிப்பாக,டாஸ்மாக் மூலமாக ரூ.2020 கோடியும்,பத்திரப்பதிவு மூலமாக ரூ.500 கோடியும்,பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை குறைந்துள்ளதால் அதன்மீதான வரி ரூ.386 கோடியும் கிடைக்காமல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
எனினும்,இதுவரை டாஸ்மாக் மூலமாகவே அதிக வருமானம் தமிழக அரசுக்கு கிடைத்துள்ளது.அதன்காரணமாக,இழந்த வருவாயை ஈடுகட்ட ஊரடங்கு முடிந்ததும் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலையை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஒரு வருடமாக மதுபானங்களின் விலை உயராமல் இருந்துள்ள நிலையில்,தற்போது மீண்டும் மதுபானங்களின் விலை உயருவதாக வெளியான தகவலால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.