உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது.
குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது.
தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் நடக்கும் என கடந்த சில நாட்களுக்கு முன்னதாக முதல்வர் அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பிற்கு பின் கடந்த 23ம் தேதி ஏற்பட்ட சாலை விபத்தில், மூளை சாவு அடைந்த அரசு ஊழியர் வடிவேலு, தனது உடல் உறுப்புகளை தானமாக வழங்கியிருந்தார். தமிழகத்தில் முதல் முறையாக உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய அரசு ஊழியர் வடிவேலுவின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், தற்போது உடல் உறுப்பு தானம் செய்பவரின் உடலுக்கு அரசு மரியாதை அழிப்பது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் உடல் உறுப்பு தானம் செய்வோர் உடல் மீது மலர்வளையம் வைத்து அரசு மரியாதை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு : திருப்போரூர் அருகே கார் மோதி 5 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகுதியில் உள்ள…
சென்னை : பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தற்போதைய தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது என்றும், அதற்கு மாற்றாக சமூகநீதி அடிப்படையில், தமிழ்நாட்டிலுள்ள…
சென்னை : ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலை 5.30 மணிக்கு புயலாக வலுவடையும் என வானிலை ஆய்வு…
தானே : அண்மையில் நடைபெற்று முடிந்த மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மாபெரும் வெற்றி…
சென்னை : வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று மாலை 5.30 மணிக்குள் புயலாக வலுப்பெறும் என…
மும்பை : இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடனான 5 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி…