10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிரடி மாற்றம் – தமிழக அரசு அரசாணை வெளியீடு!

tn school education

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பில் விருப்பப்பாடத்திற்கு தேர்ச்சி மதிப்பெண்ணை நிர்ணயம் செய்து தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, பத்தாம் வகுப்பில் விருப்பப்பாடத்துக்கான தேர்ச்சி மதிப்பெண் 35-ஆக நிர்ணயம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நடைமுறை அடுத்த 2024-25ம் கல்வியாண்டு முதல் அமலாகும் வகையில் தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டம் 2006ல் திருத்தம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தை தாய்மொழியாக கொள்ளாத 10ம் வகுப்பு மாணவர்கள் விருப்ப பாடத்திலும் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாகும்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 20ம் தேதி முதல் ஹால் டிக்கெட்: வெளியான அறிவிப்பு

மொழி சிறும்பான்மை பள்ளியில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியலுடன் விருப்பப்பாட தேர்ச்சி கட்டாயமாகும். உருது, தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற விருப்ப பாடங்களில் பெறும் மதிப்பெண் சான்றிதழில் இடம்பெறும். மேலும், தமிழ் தாய்மொழியாக கொண்டு விருப்பப்பாடம் தேர்வு செய்யாத 10ம் வகுப்பு மாணவர்கள் 5 பாடங்களில் தேர்ச்சி பெற்றால் போதும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருப்பப்பாடங்களை எழுதக்கூடிய மாணவர்களுக்கு இனி 6 பாட தேர்வுகள் என்றும் 600 மதிப்பெண் என்ற நடைமுறை அடுத்த கல்வியாண்டு முதல் அமலுக்கு வருகிறது. நடப்பாண்டு வரை நான்காவது இடம் பெறக்கூடிய விருப்ப பாடத்திற்கு எவ்வளவு மதிப்பெண் பெற்றாலும் அதை கணக்கில் கொள்ளாத நிலையில், உச்சநீதிமன்றம் தீர்ப்பை அடுத்து தேர்வு முறையில் மாற்றம் செய்தது பள்ளிக்கல்வித்துறை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்