100 நாள் வேலைத்திட்ட ஊதியம் இனி 319 ரூபாய்.! தமிழக அரசு அறிவிப்பு.!

Published by
மணிகண்டன்

சென்னை: 100 நாள் வேலைத்திட்டத்தின் ஒருநாள் ஊதியத்தை ரூ.319ஆக உயர்த்தியது தமிழக அரசு.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் , நாட்டில் கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு உடலுழைப்பு சார்ந்த வேலைகள் 100 நாட்களுக்கு வழங்கப்படும். இதன் ஒருநாள் ஊதியம் மாநிலம் சார்ந்து வேறுபடும். இந்த 100 நாள் வேலைத்திட்ட ஒருநாள் ஊதியம் ஆண்டுதோறும் குறிப்பிட்ட சதவீதம் அளவிற்கு உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, கடந்த மார்ச் மாதம், மத்திய ஊரக வளர்ச்சி துறை 100 நாள் வேலைத்திட்ட ஒருநாள் ஊதியத்தை 3 சதவீதம் முதல் 10 சதவீதம் வரையில் உயர்த்தியது. இதில் தமிழகத்திற்கு 8.5 சதவீதம் ஒருநாள் ஊதியம் உயர்த்தப்பட்டது. அதன்படி, 2023 – 2024 ஆம் நிதியாண்டில் வழங்கப்பட்டு வந்த 294 ரூபாய் ஊதியமானது 25 ரூபாய் உயர்ந்து 2024-2025 நிதியாண்டில் 319 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது.

இதற்கான அறிவிப்பை அப்போது மத்திய அரசு வெளியிட்டு இருந்தது. தற்போது இதற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி, கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 100 நாள் வேலை திட்டத்தின் ஒருநாள் ஊதியம் 319 என கணக்கிடப்பட்டு ஊதியம் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

கர்நாடகாவில் பட்டப்பகலில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி!

பீதர்: கர்நாடகா மாநிலம் பீதர் மாவட்டத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தில் நிரப்பப் பணம் எடுத்துச் சென்றவர்கள் மீது பட்டப்பகலில் மர்ம நபர்கள்…

7 minutes ago

“வணங்கானில் என்னை கோட்டியாக வாழ வைத்த என் இயக்குனருக்கு நன்றி” – அருண் விஜய் உருக்கம்.!

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 'வணங்கான்' திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.…

26 minutes ago

பும்ரா இல்லைனா ‘இவர்’ தான் டீமுக்கு வேணும்! இந்திய அணி முன்னாள் வீரர் விருப்பம்

டெல்லி  : அடுத்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி 2025  கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் 8…

32 minutes ago

“நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த…” விடாமுயற்சி ட்ரெய்லர் இன்று மாலை வெளியாகும்! ரிலீஸ் எப்போது தெரியுமா?

சென்னை: விடாமுயற்சி பொங்கல் பண்டிகை ரிலீஸில் இருந்து தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் டிரெய்லர் குறித்த அப்டேட்டை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். ஒரு…

1 hour ago

“இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் மனிதாபிமான உதவிகளுக்கு வழிவகுக்கிறது..” இந்தியா வரவேற்பு!

டெல்லி : பாலஸ்தீன நாட்டின் எல்லையில் உள்ள காசா நகரில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்குமான தாக்குதல் என்பது…

1 hour ago

ஸ்பேடெக்ஸ் திட்டம் : இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து.!

டெல்லி : விண்வெளியில் 2 செயற்கைகோள்களை இணைக்கும் டாக்கிங் செயல்முறை வெற்றிகரமாக நிறைவேறியதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இதன்மூலம் 2 செயற்கைகோள்களை…

2 hours ago