100 நாள் வேலைத்திட்ட ஊதியம் இனி 319 ரூபாய்.! தமிழக அரசு அறிவிப்பு.!

MGNRGA Scheme

சென்னை: 100 நாள் வேலைத்திட்டத்தின் ஒருநாள் ஊதியத்தை ரூ.319ஆக உயர்த்தியது தமிழக அரசு.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் , நாட்டில் கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு உடலுழைப்பு சார்ந்த வேலைகள் 100 நாட்களுக்கு வழங்கப்படும். இதன் ஒருநாள் ஊதியம் மாநிலம் சார்ந்து வேறுபடும். இந்த 100 நாள் வேலைத்திட்ட ஒருநாள் ஊதியம் ஆண்டுதோறும் குறிப்பிட்ட சதவீதம் அளவிற்கு உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, கடந்த மார்ச் மாதம், மத்திய ஊரக வளர்ச்சி துறை 100 நாள் வேலைத்திட்ட ஒருநாள் ஊதியத்தை 3 சதவீதம் முதல் 10 சதவீதம் வரையில் உயர்த்தியது. இதில் தமிழகத்திற்கு 8.5 சதவீதம் ஒருநாள் ஊதியம் உயர்த்தப்பட்டது. அதன்படி, 2023 – 2024 ஆம் நிதியாண்டில் வழங்கப்பட்டு வந்த 294 ரூபாய் ஊதியமானது 25 ரூபாய் உயர்ந்து 2024-2025 நிதியாண்டில் 319 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது.

இதற்கான அறிவிப்பை அப்போது மத்திய அரசு வெளியிட்டு இருந்தது. தற்போது இதற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி, கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 100 நாள் வேலை திட்டத்தின் ஒருநாள் ஊதியம் 319 என கணக்கிடப்பட்டு ஊதியம் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்