கடந்த ஜூலை மாதமே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென்று பிரதமருக்கு கடிதம் எழுதி இருக்கிறேன் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டு நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மத்திய அமைச்சர் ஹரிஷ்வர்தனுக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடிதம் எழுந்தினார். கொரோனா வைரஸை கருத்தில் கொண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். நடப்பாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையை 12-ஆம் வகுப்பு அடிப்படையில் நடத்தவேண்டும் என்று வலியுறுத்தினார். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும் மாணவர்கள் தேர்வுக்கு தயாராவது கடினம் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் திருவாரூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், கடந்த ஜூலை மாதமே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென்று பிரதமருக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…