வெப்ப அலை – மாநில பேரிடராக அறிவித்தது தமிழக அரசு!
வெப்ப அலையால் உயிரிழப்புகள் நேர்ந்தால் அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.4லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை : வெப்ப அலைகளின் தாக்கம் அவ்வப்போது தமிழகத்தில் வாடி வதைத்து வரும். இதனால், பல உயிரிழப்புகளும் தமிழகத்தில் நேர்ந்துள்ளது. சமீபத்தில் கூட ஏற்பட்ட வெப்ப அலைக்கு தமிழகத்தில் ஒரு சிலர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தமிழக அரசு வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவித்துள்ளது. மேலும், வெப்ப அலையால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு மாநில பேரிடர் நிதியிலிருந்து ரூ.4 லட்சம் நிவாரணமும் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அதைத் தொடர்ந்து வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான மருத்துவ வசதிகள், ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்க, பேரிடர் நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் வெப்ப அலை தாக்கத்தின் போது தண்ணீர் பந்தல்கள் அமைத்து குடிநீர் வழங்குவதற்கும் பேரிடர் நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அனுமதியும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
வெப்ப அலை தாக்கத்தை மாநிலப் பேரிடராக அறிவித்தது தமிழ்நாடு அரசு.
வெப்ப அலையால் மரணம் அடைபவர்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம். pic.twitter.com/szc0i9mRtv
— Kannan Jeevanantham (JK) (@Im_kannanj) October 28, 2024