முதியோர், ஆதரவற்றோர் உதவித்தொகையை உயர்த்த தமிழக அரசு முடிவு!

tamilnadu govt

விதவை மற்றும் முதியோர் உதவித் தொகையை ரூ.1000ல் இருந்து ரூ.1,200-ஆக உயர்த்த முடிவு என தகவல்.

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அரசின் அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறை சோதனைகளுக்கு பின் நடைபெறும் முதல் அமைச்சரவை கூட்டம். முதலமைச்சர் தலைமையில் நடைபெற்று வரும் அமைச்சரவை கூட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாகவும், அமலாக்கத்துறை நடவடிக்கை தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது கூறப்படுகிறது.

மேலும், விதவை மற்றும் முதியோர் உதவித் தொகையை 1000 ரூபாயில் இருந்து 1,200 ரூபாயாக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதியோர் மற்றும் ஆதரவற்ற கைம்பெண் மாத உதவி தொகையை ரூ.1,000-ல் இருந்து ரூ.1,200 ஆக உயர்த்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும், முதியோர், ஆதரவற்ற கைம்பெண் உதவித்தொகை உயர்த்தப்பட்டால் சுமார் 30 லட்சம் பேர் பயன்பெறுவர் எனவும் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்