சென்னை:அரசுப் பணியாளர்களின் வாரிசுகளுக்கும் மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்திற்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.
புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்படி,தமிழக அரசுப் பணியாளர்களின் வாரிசுகளுக்கும் மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்திற்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:
“தமிழக அரசுப் பணியாளர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களைச் சார்ந்து வாழும் மகன்கள் மற்றும் மகள்கள் அவர்களின் வயது வரம்பினைக் கருத்தில் கொள்ளாமல் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன்பெறும் வகையில் ஆணைகள் விரைவில் பிறப்பிக்கப்படும் எனவும்,மேலும்,அரசு ஊழியர்கள் இத்திட்டத்தின்படி இடர்பாடுகள் ஏதுமின்றி பயன்பெற எதுவாக,அவர்களுக்கு உதவிடும் வகையில் தனி தொலைபேசி உதவி மையம் ஒன்று அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கடந்த 07-09-2021 அன்று விதி 110 இன் கீழ் சட்டப் பேரவையில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில்,அரசுப் பணியாளர்களின் வாரிசுகளுக்கும் மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்திற்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் மருத்துவ காப்பீடு திட்டமானது பொதுத்துறை நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி மூலம் செயல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பனையூரில் உள்ள த.வெ.க. தலைவர் விஜய் வீட்டிற்குள் செருப்பு வீசிய நபரால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இளைஞர்…
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நேற்று மாலை…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் இன்று…
குளித்தலை : கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அரசுப் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், சம்பவ…
சென்னை : நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28, 2025 அன்று வெளியாகும்…
சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு…