ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு.! 

Tamilnadu Governor RN Ravi

தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றது முதலே ஆளும் திமுக அரசுக்கும், ஆளுநர் ரவிக்கும் இடையேயான கருத்து மற்றும் மற்றும் நிர்வாக மோதல்கள் தொடர்ந்து கொண்டே தான் இறுகினறன. தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றும் நீட் விலக்கு, ஆன்லைன் விளையாட்டு உள்ளிட்ட முக்கிய மசோதாக்களுக்கு கூட உரிய நேரத்தில் கையெழுத்திடாமல் காலததப்படுத்தி வந்துள்ளார்.

தமிழக அரசு நிறைவேற்றும் சட்ட மசோதா மற்றும் உத்தரவுகளுக்கு உரிய நேரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி கைய்யெழுத்திட மறுக்கிறார் என்று தமிழக அரசு மத்திய அரசிடம் பல முறை முறையிட்டுள்ளது. தமிழக எம்பிக்கள் குடியரசு தலைவரிடம் இது குறித்து மனு அளித்துள்ளனர். தமிழக அரசியல் கட்சிகள் ஆளுநருக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதல்வராக ஒரு கருத்து.. பிரதமரான பிறகு ஒரு கருத்து.! முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் குற்றசாட்டு.!

இந்நிலையில் தான்,  தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு, தமிழக அரசின் உத்தரவுகளுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து ஒப்புதல் அளிக்காமல் அதனை தாமதப்படுத்தி வருகிறார் என கூறி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்காக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாநில அரசு நிறைவேற்றும் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால அவகாசம் நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும், ஆளுநர் ஒப்புதல் அளிக்காத காரணத்தால் நிர்வாக குளறுபடி ஏற்படுகிறது என்றும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் ஆளுநருக்கு எதிரான வழக்கில் குறிப்பிட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள அவசர வழக்கு விசாரணைக்கு எப்போது பட்டியலிடப்படும் என்பது அடுத்தடுத்த உச்சநீதிமன்ற உத்தரவுகளில் வெளியாகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
R Ashwin -- Virat kohli
abhishek sharma varun chakravarthy
vidaamuyarchi anirudh
jos buttler
ragupathy dmk thiruparankundram
Subman Gill - Abhishek sharma