“மோட்டார் ஸ்போர்ட்ஸ்-க்கு ஊக்கமளிக்கும் தமிழ்நாடு அரசு”..நன்றி தெரிவித்த அஜித்குமார்!
சென்னையில் கார் ரேஸ் நடத்தியதற்கும், விளையாட்டுத்துறையில் தனி கவனம் செலுத்துவதற்கும் தமிழக அரசுக்கு நடிகர் அஜித்குமார் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
துபாய் : நடிகர் அஜித் சினிமாத்துறையில் நடிப்பதில் மட்டும் ஆர்வம் செலுத்தாமல் அதற்கு அடுத்தபடியாக கார் பந்தயங்களில் கலந்துகொன்டு விளையாடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். குறிப்பாக, துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின் அணி வெற்றி பெற்றது.
சமீபத்தில் நடந்த விபத்தால், அஜித் கார் ரேஸில் பங்கேற்கவில்லை. ஆனால், அவரது அணி சிறப்பாக செயல்பட்டு 3வது இடம் பிடித்தது. அஜித்தின் அணி 3-வது இடத்தில் பிடித்ததை தொடர்ந்து அவருக்கு அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தும் இருந்தார்கள்.
கார் பந்தயத்தில் பங்கு பெற்று வெற்றியடைந்த பிறகு அஜித்குமார் பேட்டியும் கொடுத்து வருகிறார். அது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி வைரலாகி கொண்டு இருக்கிறது. அப்படி தான் தற்போது அஜித் தமிழக அரசு பற்றி பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பேசிய அஜித் ” மோட்டார் ஸ்போர்ட்ஸ்-க்கு ஊக்கமளிக்கும் தமிழ்நாடு அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
முதல்முறையாக ஸ்ட்ரீட் ரேசிங் என்பது சென்னையில் நடைபெற்றது. அதுவும் இரவுநேர போட்டியாக நடந்தது. இதனை சரியாக நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு நான் என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்தியாவில் மோட்டார் ஸ்ட்போர்ஸ்-க்கு மிகப்பெரிய ஊக்கமாக அது இருந்தது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மோட்டார் ஸ்போர்ட்ஸ்க்கு நிறைய நல்ல விஷயங்ளை செய்து வருகிறது” எனவும் அஜித்குமார் பேசியுள்ளார்.