உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை சென்னையில் நடத்த தமிழக அரசு நேரடி விண்ணப்பம்!

செஸ் : கனடாவில் நடைபெற்ற ஃபிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தார் தமிழக இளம் செஸ் வீரரான குகேஷ். இந்த வெற்றியின் மூலம் நடப்பு செஸ் சாம்பியனான சீன வீரர் டிங் லிரினுடன் இந்த ஆண்டு இறுதியில் உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாடவுள்ளார்.
இந்த போட்டியை முதலில் இந்தியாவில் உள்ள டெல்லி (அல்லது), சென்னை (அல்லது) மற்றும் குஜராத் (அல்லது) நடத்துவதற்கு கண்டிடேட்ஸ் தொடர் முடிவடைந்த பிறகு உலக செஸ் சம்மேளனத்திடம் பேச்சு வார்த்தை நடத்தியதாக இந்திய செஸ் சம்மேளனத்தின் செயலாளரான தேவ் படேல் தெரிவித்திருந்தார்.
மேலும், இந்த தொடரை நடத்த விருப்பமுள்ள நாடுகள் விண்ணப்பிக்கலாம் என்று உலக செஸ் சம்மேளனம் தெரிவிருந்த நிலையில் பல நாடுகளும் விண்ணப்பம் செய்தும் வருகின்றனர்.
இதை தொடர்ந்து இந்தியாவில் சென்னை, குஜராத், டெல்லி என 3 இடங்களில் இந்த தொடரை நடத்துவதற்கு இந்திய செஸ் கூட்டமைப்பு விருப்பம் தெரிவித்த நிலையில் தற்போது, தமிழக இந்த சாம்பியன்ஷிப் தொடரை சென்னையில் நடத்த வேண்டும் என்று நேரடியாக ஒரு விண்ணப்பம் அளித்து விருப்பம் தெரிவித்துள்ளது.
இதனால், வருகிற ஜூன் மாத இறுதியில் இந்த சாம்பியன்ஷிப் தொடர் எந்த நாட்டில் நடக்கும் என்ற இறுதி முடிவை ஃபிடே கவுன்சில் (FIDE Council) அறிவிப்பார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025