ஃபெஞ்சல் புயலை தீவிரமான இயற்கைப் பேரிடராக அறிவித்தது தமிழ்நாடு அரசு.!
பெஞ்சல் புயலை தீவிரமான இயற்கை பேரிடராக அறிவித்து தமிழ்நாடு அரசின் பேரிடர் மேலாண்மை துறை.
சென்னை: வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல் நவ.30-இல் கரையைக் கடந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, வடதமிழக மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். அதன்படி, ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், ஃபெஞ்சல் புயலை தீவிரமான இயற்கை பேரிடராக தமிழக அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக, புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,000 நிவாரணம் அறிவித்திருந்து தமிழக அரசு.
இதனிடையே, ஃபெஞ்சல் புயல் தற்காலிக மற்றும் நிரந்தர மறுசீரமைப்பு பணிகளுக்கு ரூ.6,675 கோடி வழங்குமாறு மத்திய அரசிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்து இருந்தார். ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு உதவும் விதமாக மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு 944.80 கோடியை ஒன்றிய அரசு ஒதுக்கியது.
ஆனால், ஒன்றிய பாஜக அரசு, ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளை பேரிடராக அறிவிக்க மறுத்தது. இந்த நிலையில், பெஞ்சல் புயலை தீவிரமான இயற்கை பேரிடராக அறிவித்து, தமிழ்நாடு அரசின் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், அரசிதழ் வெளியிட்டுள்ளது.