2024ம் ஆண்டுக்கான ‘TNPSC’ தேர்வு அட்டவணை வெளியீடு.!
2024 – 2025ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது. அதன்படி, குரூப் 1 தேர்வுகளுக்கான அறிவிப்பு அடுத்தாண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, ஜூலையில் தேர்வு நடத்தப்படும்.
குரூப்-2, 2A தேர்வுக்கான அறிவிப்பு மே மாதம் வெளியிடப்பட்டு ஆகஸ்ட் மாதம் தேர்வு நடத்தப்படும். குரூப்-4 தேர்வுக்காக அறிவிக்கை அடுத்தாண்டு ஜனவரியில் வெளியிடப்பட்டு ஜூன் மாதம் தேர்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
மின்சாரம் மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்க நடவடிக்கை – தலைமை செயலாளர்.!
தேர்வு முடிவுகள் வெளியிடுவதல் காலதாமதம் உள்ளிட்ட சர்ச்சைகளில் டிஎன்பிஎஸ்சி (TNPSC) தொடர்ந்து சிக்கி வருகிறது. இந்நிலையில், அடுத்தாண்டு நடைபெறும் போட்டி தேர்வுகள் பற்றி அனைத்து விவரங்களையும் தங்களது இணையதளத்தில் தேர்வாணையம் தெளிவாக வெளியிட்டுள்ளது.