5,8ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்று செப்டம்பர் 13-ஆம் தேதி வெளியிட்ட அரசாணையை ரத்து செய்வதாக புதிய அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 5, 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 60 மதிப்பெண் அடிப்படையில் தான் எழுத்து தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.இந்த அறிவிப்பு மாணவர்களுக்கு பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் அமையும் என கல்வியாளர்கள் குற்றம் சாட்டினர்.இதன் பின்பு 5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட அறிக்கையில், 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக 13.09.2019 அன்று பள்ளி கல்வித்துறையின் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது.இது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் வரப்பெற்றன.அவற்றை மாண்புமிகு அம்மாவின் அரசு கவனமுடன் பரிசீலித்து,இந்த அரசாணையை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளது.எனவே ,ஏற்கனவே உள்ள பழைய நடைமுறையே தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தேர்வு ரத்து செய்யப்படும் என அமைச்சர் அறிவித்திருந்த நிலையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.அதாவது ,இதற்காக செப்டம்பர் 13-ஆம் தேதி வெளியிட்ட அரசாணையை ரத்து செய்வதாக புதிய அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை…
டெல்லி : உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…