முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது தமிழக அரசு.
டெண்டர் முறைகேடு:
அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை உள்ளிட்ட மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த புகாரின் அடிப்படையில், எஸ்.பி வேலுமணிக்கு சொந்தமான வீடு அலுவலகங்களில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர்.
வழக்கு ரத்து:
டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இதனைத்தொடர்ந்து, மாநகராட்சி பணிகளில் டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக எஸ்.பி.வேலுமணி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருந்தது.
தமிழக அரசு மேல்முறையீடு:
ஆனால், அவர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை ரத்து செய்ய முடியாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமீழக அரசு மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது. டெண்டர் வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: விடாமுயற்சி பொங்கல் பண்டிகை ரிலீஸில் இருந்து தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் டிரெய்லர் குறித்த அப்டேட்டை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். ஒரு…
டெல்லி : பாலஸ்தீன நாட்டின் எல்லையில் உள்ள காசா நகரில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்குமான தாக்குதல் என்பது…
டெல்லி : விண்வெளியில் 2 செயற்கைகோள்களை இணைக்கும் டாக்கிங் செயல்முறை வெற்றிகரமாக நிறைவேறியதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இதன்மூலம் 2 செயற்கைகோள்களை…
சென்னை : விஜய் சேதுபதி இன்று (ஜனவரி 16) தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரை பிரபலங்கள் பலரும்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. இதனால், மீண்டும்…
நியூ யார்க் : அமெரிககாவை சேர்ந்த நிதிசார்பு ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம் இந்திய வர்த்தகர்கள் மத்தியில் மிக பிரபலமான…