10 காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு.!
நெல்லை சரகக டிஐஜி மற்றும் ராமநாதபுரம் சரக டிஐஜி உட்பட 10 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை : தமிழ்நாட்டில் காவல்துறையைச் சேர்ந்த 10 உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நெல்லை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹதிமனிக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி. பொறுப்பும் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு எஸ்.பி.யாக சுஜாதா நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் டிஐஜி அபினவ் குமார் மதுரைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை டிஐஜி மூர்த்தி ராமநாதபுரம் டிஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், சென்னை மாநகர காவல் உளவுப்பிரிவு- 1 துணை ஆணையராக ஆர். சக்திவேல் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மயிலாப்பூர் நலப்பிரிவு துணை ஆணையராக ஹரிகிரண் பிரசாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இது தவிர, சென்னை கிழக்கு போக்குவரத்து துணை ஆணையராக மெகலீனா ஹைடன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், சென்னை வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையராக பாஸ்கரன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை சரகக டிஐஜி மற்றும் ராமநாதபுரம் சரக டிஐஜி உட்பட 10 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு pic.twitter.com/iUZoFXfLYZ
— தங்க.காளிப்பாண்டி (@sureshkalipandi) March 25, 2025