‘அரசு ஊழியர்களுக்கு ஏப்.2ஆம் தேதி ஊதியம்’ – தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!
அரசு ஊழியர்களுக்கு மார்ச் மாதத்திற்கான ஊதியம் ஏப்.2ம் தேதி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை : அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான மார்ச் மாத ஊதியம்ஏப்ரல் 2 ஆம் தேதி ஊதியம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது மார்ச் மாதத்திற்கான சம்பளமாகும், இது பொதுவாக மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் வழங்கப்படுவது வழக்கம். இவர்களில் அரசு ஊழியர்கள் மட்டுமின்றி ஓய்வூதியதாரர்களும் அடங்குவர்.
பொதுவாக, ஏப்ரல் மாத தொடக்கத்தில் நிதியாண்டு மாற்றம் இருப்பதால், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிறு மாற்றங்கள் ஏற்படுவது உண்டு. ஆதாவது, ஆண்டுதோரும், ஏப்.,1ம் தேதி வங்கிகள் வருடாந்திர கணக்கு முடிக்கும். இதன் காரணமாக அன்று (ஏப் 1) வங்கிகள் செயல்படாது என்பதால், தமிழக அரசு ஊழியர்கள் 9.30 லட்சம் பேருக்கு ஏப்.,2ம் தேதி ஊதியம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இந்த ஊதியம் அரசு ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும். இதற்கு முன்பு, மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (Dearness Allowance – DA) உயர்வு அறிவிக்கப்பட்டிருந்தது (2024 ஜூலை முதல் 3% உயர்வு), ஆனால் தமிழக அரசு இது குறித்து கூடுதல் அறிவிப்புகளை வெளியிடவில்லை என்றாலும், ஊதிய வழங்கல் தொடர்பான இந்த அறிவிப்பு ஊழியர்களிடையே முக்கியத்துவம் பெறுகிறது.