#Breaking:தமிழகத்தில் இன்றும்,நாளையும் சலூன்கள் இயங்க அனுமதி- தமிழகஅரசு அறிவிப்பு..!

தமிழகத்தில் இன்றும்,நாளையும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை சலூன்கள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பின் காரணமாக வருகின்ற மே 10 முதல் மே 24 வரை முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது.
முழு ஊரடங்கின் போது அனைத்து தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள்,ஐ.டி.நிறுவனங்கள்,பூங்காங்கள்,அருங்காட்சியகங்கள்,சலூன்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும்,பேருந்து,கார்கள் மற்றும் ஆட்டோக்கள் ஓடாது என்றும்,டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இருப்பினும்,முழு ஊரடங்கு காலத்தில் காய்கறி கடைகள், மளிகைக்கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்கவும்,நியாயவிலைக் கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,தமிழகத்தில் வரும் திங்கள் அதிகாலை 4 மணி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் முன்னேற்பாடுகளை செய்துகொள்ள இன்றும் நாளையும் அத்தியாவசிய கடைகள் இயங்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.
அதன்படி,அனைத்து சலூன் கடைகள் இன்றும்,நாளையும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025