5 கிலோ கூடுதல் அரிசி வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 5 கிலோ கூடுதல் அரிசி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தினக்கூலிகள், கட்டட வேலைகள் செய்பவர்கள் உள்ளிட்ட பல தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். இதனால், ஏப்ரல், மே மாதங்களில் தமிழக ரேஷன் கடைகளில் கிடைக்கும் அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதாவது, ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான 3 மாதங்களுக்கு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.