சென்னை : சென்னையை சேர்ந்த மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து பயண டோக்கன்கள் வரும் ஜூன் 21-ம் தேதி முதல் வழங்கப்படவுள்ளது. மாநகர் போக்குவரத்து கழகப் பேருந்துகளில், சென்னை வாழ் மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பேருந்து வசதி வழங்கப்படும் என மாநகரப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் வசிக்கும் மூத்த குடிமக்களுக்கு நடப்பாண்டு ஜூலை முதல் டிசம்பர் வரை பயன்படுத்தக் கூடிய ஒரு மாதத்துக்கு 10டோக்கள்கள் வீதம் 6 மாதங்கள் மாநகர் பேருந்துகளில் கட்டணம் இன்றி பயணிக்க டோக்கன் வழங்கப்படுகிறது.
இதற்காக, சென்னையில் உள்ள பணிமனைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் என 42 இடங்களில் இந்த மாதம் 21ம்தேதி முதல் ஜூலை 31ம்தேதி வரை காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை வழங்கப்படவுள்ளது.
மூத்த குடிமக்கள் பயண டோக்கன்களை பெற இருப்பிட சான்று. குடும்ப அட்டை, வயது சான்று, ஆதார் அட்டை, 2 வண்ண புகைப்படம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…