தீபாவளி போனஸ் அறிவித்த தமிழக அரசு! கொண்டாட்டத்தில் ஊழியர்கள்! யாருக்கு எவ்ளோ.?

தகுதியுள்ள அரசு ஊழியர்களுக்கு ரூ.8,400 முதல் ரூ.16,800 வரை போனஸாக பெறுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Diwali Bonus

சென்னை : வரும் அக்-31ம் தேதி தீவாளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில், தற்போது தமிழக அரசு அரசாங்க ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள இந்துக்களால் தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும்.

அதில், ஒவ்வொரு ஆண்டும் இந்த தீபாவளி பண்டிகைக்கு அரசு ஊழியர்களுக்கு போனஸும் அளிக்கப்படும். அதன்படி, பணியாற்றி வரும் அனைத்து அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸை தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது.

அதன்படி, யார்யாருக்கு எப்படி போனஸ் வழங்கவுள்ளார் என்பதை பார்ப்போம் ..

  1. இலாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் C மற்றும் ‘D’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அந்தந்த நிறுவனங்களின் ஒதுக்கப்படக்கூடிய உபரி தொகையை கணக்கில் கொண்டு 8.33 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
  2. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் பணிபுரியும் தகுதியுடைய ‘C’ மற்றும் பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் 11.57 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 20 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
  3. ஒதுக்கக்கூடிய உபரி தொகை இல்லாத பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் C மற்றும் D பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு குறைந்தபட்ச மிகை ஊதியம் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 10 விழுக்காடு மிகைஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
  4. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் பணிபுரியும் தகுதியுடைய ‘C’ மற்றும் ‘D’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகையும் வழங்கப்படும்.
  5. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் தகுதியுடைய ‘C’ மற்றும் ‘D’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு மிகை ஊதியம் வழங்கப்படும்.
  6. இது தவிர தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ3,000/- கருணைத் தொகையாக வழங்கப்படும்.

தமிழக அரசு அறிவித்துள்ள இந்த போனஸ் அறிவிப்பால், அரசு ஊழியர்கள் கொண்டாட்டத்தில் இருந்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news
Vittalkumar murder case - Bala Sait and Dharani kumar arrested
Bengaluru - Accident
garam masala (1)
[File Image]
Robin uththappa
smriti mandhana SCORE