#BREAKING: திரைத்துறையினருக்கு தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு

Default Image

தமிழ் திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரையின் Post production பணிகளுக்கு அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு .

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.இதனால் திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் திரைத்துறையினர் படப்பிடிப்பு நடத்தவும் தடை விதிக்கப்பட்டது.3 ஆம் கட்ட ஊரடங்கில் ஒரு சில தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது.இதனிடையே சினிமா துறையினர் நீண்ட நாட்களாக ஒரு சில வேலைகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில்  தமிழ் திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரையின் Post production பணிகளுக்கு அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு.அதன்படி வருகின்ற 11-அம தேதி முதல் பணிகளை தொடங்க வேண்டும்.

1.படத்தொகுப்பு (அதிகபட்சம் 5 பேர் ) 

2.குரல் பதிவு (அதிகபட்சம் 5 பேர் )

 3.கம்ப்யூட்டர் மற்றும் விஷுவல் கிராபிக்ஸ் (10 முதல் 15 பேர் )

4.டி.ஐ (DI ) எனப்படும் நிற கிரேடிங் -(அதிகபட்சம் 5 பேர் )

5. பின்னணி இசை (அதிகபட்சம் 5 பேர் )

6.ஒலிக்கலவை (அதிகபட்சம் 5 பேர் )

எனவே Post production பணிகளை மேற்கொள்ளும் சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள் ,இப்பணியில் ஈடுபடுகின்ற பணியாளர்களுக்கு உரிய அனுமதி சீட்டுகளை பெற்று தந்து, அவர்கள் சமூக இடைவெளியுடனும், முகக்கவசம் மற்றும் கிருமிநாசினி உபயோகித்தும் , மத்திய மணிலா அரசுகள் விதிக்கும் அனைத்து கட்டுப்பாடுகளை பின்பற்றியும் பனி செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்