தமிழக அரசு அதிரடி முடிவு ..! அச்சத்தில் நிறுவனங்கள் ..!
விடுமுறை நாட்களில் அலுவலகம் நடத்தும் பெரிய நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையினை அதிகரித்தும், பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகளில் வேலை செய்பர்களின் காப்பீட்டு தொகையை உயர்த்தும் சட்ட திருத்த மசோதாவை சட்டமன்றத்தில் அமைச்சர் நிலோபர் கபில் இன்று அறிவித்தார்.
இன்று சட்டமன்றத்தில் அமைச்சர் நிலோபர் கபில் இரண்டு சட்ட மசோதாக்களை வாசித்தார். அதில் அவர் கூறியதாவது, விதியை மீறி தேசிய மற்றும் சிறப்பு விடுமுறை நாட்களில் அலுவலகம் நடத்தும் பெரிய நிறுவைங்களின் அபராத தொகை கடந்த 10 ஆண்டுகளாக உயர்த்தபடவில்லை எனவே அதை உயர்த்தி சட்ட மசோதாவை தாக்கல் செய்தார்.
அதன்படி 1958 ஆண்டு தொழிற்நிறுவனங்கள் சட்டத்தின் 8ம் சட்ட பிரிவில் உள்ள 1000 ரூபாய் அபராதம் 5000 ருபாயாகவும், 2500 ரூபாய் அபராதம் 10000 ருபாயாகவும். 9ம் சட்ட பிரிவில் உள்ள 500 ரூபாய் அபராதம் 1000 ருபாயாகவும். 12ம் சட்ட பிரிவில் உள்ள 500 ரூபாய் அபராதம் 5000 ருபாயாகவும் மாற்றப்பட்டுள்ளது.
இரண்டாவதாக, பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகளில் பணிபுரிவோருக்கான காப்பீட்டுத்தொகையை 50 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சமாக உயர்த்துவதற்கான சட்ட திருத்த மசோதாவையும் தாக்கல் செய்தார். அதன்படி, 1948 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் 7- AA எனும் பிரிவில் 50000 என்பதற்கு பதில் ஒரு லட்சம் என மாற்றப்பட்டுள்ளது.