தமிழகத்திற்கு நல்லாட்சி விருது கொடுத்தவர்களை ‘அடித்து உதைக்க’ வேண்டும்.! திமுக தலைவர் கடும் விமர்சனம்.!
- தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா இல்லத் திருமண விழாவில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று கலந்துகொண்டார்.
- நிகழ்ச்சியில் பேசி அவர், தமிழகத்திற்கு நல்லாட்சி விருது கொடுத்தவர்களை அடித்து உதைக்க வேண்டும் என்றும், தற்போதைய ஆட்சி கமிஷன் ஆட்சியாக இருக்கிறது என்று கடுமையாக விமர்சித்தார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா இல்லத் திருமண விழாவில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று கலந்து கொண்டார். அப்போது திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மணமக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். பின்னர் பேசிய அவர், மக்கள் விரோத சட்டங்கள் தொடர்ந்து நடத்தப்படுவதாக குற்றம்சாடினார். பின்னர், பாஜகவின் கூட்டணியில் இருக்கும் கட்சி பிகாரில் இருக்கக்கூடிய முதலமைச்சர் நிதிஷ் குமார், இவர் பாஜகவிற்கு ஆதரித்து ஓட்டுப்போட்டும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். தொடர்ந்து மேற்குவங்கத்தில் மம்தா பேனர்ஜி எதிர்த்துக் கொண்டு வருகிறார்கள். ஆகையால் இந்தியா முழுவதும் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழகத்தில் எதிர்க்க முடியாத நிலையில் இருக்கும் இந்த ஆட்சி என தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, திமுக ஸ்டாலின் தமிழக அரசை பற்றி பேசிய அவர், அதாவது அவர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் நாங்கள் சிறப்பான ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறோம். இதற்காக விருதுலாம் வாங்கிக் கொண்டிருக்கிறோம், என கூறிய ஸ்டாலின் தமிழகத்திற்கு நல்லாட்சி விருது கொடுத்தவர்களை அடித்து உதைக்க வேண்டும் என்றும், தற்போதைய ஆட்சி கமிஷன் ஆட்சியாக இருக்கிறது என்று கடுமையாக விமர்சித்தார். மு.க.ஸ்டாலினின் இந்த கருத்து தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.