தமிழகத்தில் நாளை முதல் மீண்டும் ஏ.சி. பேருந்து சேவை..!

நாளை முதல் மாவட்டங்கள், மாநிலங்களுக்கிடையே அரசு போக்குவரத்தை சார்ந்த 702 ஏ.சி பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
கொரோனா அதிகரிப்பால் மே 10 முதல் நிறுத்தப்பட்ட அரசு ஏ.சி பேருந்துகள் மீண்டும் இயக்கப்படுகின்றன. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி அரசு போக்குவரத்துக் கழகத்தைச் சார்ந்த 702 குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்படும் என சமீபத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்தார்.
சென்னை மாநகரில் 48 குளிர்சாதன பேருந்துகளும், அரசு விரைவு போக்குவரத்து கழகம் (SETC) சார்பாக 340 குளிர்சாதனப் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏ.சி. பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் முககவசம் அணிய வேண்டும், கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்த பிறகு தான் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குளிர்சாதன பேருந்துகள் தூய்மை படுத்தி, பழுதுபார்க்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.
லேட்டஸ்ட் செய்திகள்
உடனே வெளியேறுங்கள்.., 27ம் தேதி வரை தான் டைம்.! பாக். நாட்டினருக்கு விசா சேவை நிறுத்தம்.!
April 24, 2025
இந்தியா vs பாகிஸ்தான் : நதிநீர் நிறுத்தம், மருத்துவ சேவை நிறுத்தம்., பாக். வான்வழி தடை!
April 24, 2025