இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்களை விரைந்து விடுவிக்க வேண்டும் – மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கோரிக்கை!

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்களை விரைந்து விடுவிக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த 56 மீனவர்கள் இலங்கை சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த சில தினங்களுக்கு முன்பதாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அதில் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 56 மீனவர்களையும் விடுவித்து, பாதுகாப்பாக இந்தியாவிற்கு அழைத்து வர தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், அந்த மீனவர்களின் 75 மீன்பிடி படகுகளை மீட்டெடுக்க வேண்டும் எனவும், பொங்கல் திருநாளை முன்னிட்டு இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை விடுவித்து அவர்களின் குடும்பத்தினருடன் மீண்டும் இணைவதை உறுதி செய்ய தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் முதல்வர் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து தற்பொழுதும் இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை மனிதாபிமான அடிப்படையில் விரைந்து விடுவிக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் இலங்கை அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025