தமிழக மீனவர்கள் கைது – வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்.

Default Image

கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் 7 பேர், எல்லை தாண்டி வந்ததாக  இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களை விடுவிக்க கோரி தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக்கூறி தமிழக மீனவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுளளனர், இதுவரை இலங்கை கடற்படையினரால் 98 மீன்பிடி படகுகள் பிடித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்தாகவும், இதற்கு தகுந்த நடவடிக்கைகள் எடுத்து மீனவர்களையும், படகுகளையும் மீட்டு தர கோரப்பட்டுள்ளதாதவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினரை கண்டித்தும் , மத்திய மற்றும் மாநில அரசுகள்‌ தலையிட்டு இவ்விவகாரத்தில் நடிவடிக்கை எடுக்க கோரி இராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்