தமிழகம் பல்வேறு அபாயங்களை எதிர்நோக்கியிருக்கிறது-வைகோ
சென்னை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், 23 ஆண்டுகளுக்குப் பின்னர் மாநிலங்களவையில் உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ள இருக்கிறேன்.
தமிழகம் பல்வேறு அபாயங்களை எதிர்நோக்கியிருக்கிறது. மேகதாது அணை கட்டுவதன் மூலம் காவிரி அடியோடு பாழாகிவிடும் ஹைட்ரோகார்பன் திட்டத்தின் மூலம் தமிழகம் மெதுவாக சஹானா பாலைவனமாக மாறும் வாய்ப்புகள் இருக்கிறது என்று தெரிவித்தார்.