8000-ஐ தாண்டியது தமிழகம்.! இந்திய அளவில் 3 ஆம் இடம்.!

Default Image

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8002 ஆக அதிகரித்துள்ளது. இதனால் இந்திய அளவில் 3 ஆம் இடத்தை பிடித்துள்ளது.

தமிழகத்தில் மேலும் இன்று 798 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளார். ஏற்கனவே கொரோனாவால் 7,204 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 8002 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 538 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 4371 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மேலும் 6 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் தமிழகத்தில் உயிரிழப்பின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது.

இதைத்தொடர்ந்து இன்று 92 பேர் கொரோனா வைரஸில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2051 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 2,54899 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இன்று ஒரே நாளில் 11,862 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 798 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்த 798 பேரில் ஆண்கள் 514 பேர், பெண்கள் 284 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது கொரோனா வார்டில் 5,895 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூரில் 97 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியான நிலையில், அங்கு மொத்த எண்ணிக்கை 440 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து செங்கல்பட்டில் மேலும் 90 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 356 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், இந்திய அளவில் கொரோனா பதிப்பில் தமிழகம் 3வது இடம் பிடித்துள்ளது. முதலிடம் மகாராஷ்டிராவில் 22171 பேரும், 2வது இடத்தில் குஜராத்தில் 8194 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்